பூதசுர ஆஹிகசுர விஷசுர நாடி லக்ஷணம் ….
. பூதாசுரத்தில் நாடி அதிவேகமாய் நடக்கும். மேலும்,
முறைகாச்சல், விஷசுரம், இவைகளில் நாடி கொஞ்ச நேரம் வேகமாயும் நின்றும் நடக்கும்.
துவாஹிக திரியாஹி கசாதுர்தாஹிக சுர நாடி ……
இரண்டு நாள் மூன்று நாள், நாலு நாளுக்கொரு முறை வரும்
சுரங்களுக்கு நாடியானது அதி உஷ்ணமாய் கொளவி நடை நடக்கும்.
குரோத காம சுர நாடி லக்ஷணம் …..
குரோத சுரத்தில் நாடி விருத்தமாயும், காமசுரத்தில் நாடியானது ஒன்றுக் கொன்று கலந்தும் நடக்கும்.
ஸ்திரீ புருஷ விரஹசுர நாடி …..
மாதர்களுக்கு புருஷ விரகத்தினால் உண்டாகும் விரஹசுர நாடியானது க்ஷீணமாயும்,
மந்தமாயும், புருஷர்களுக்கு சிதிலமாயும் நடக்கும்.
வியாகூல நாடி …..
வேலை செய்தல், சஞ்சரித்தல், சிந்தித்தல், பணம் பறிகொடுத்தல் (வருத்தப் படுதல்)
வியாகூலப்படுதல், முதலியவைகளில் நாடியானது அநேக விதமாய் நடக்கும்.
அசீரண நாடி …..
அசீரணத்தில் நாடியானது, கடினமாயும், சீதளமாயும், நிர்மலமாயும்,
வேகமாயும் அசுத்தமாயும், ஒடுவதுப்போலும் நடக்கும்.