உணவு ஒழுக்கம் உழைப்பு.
ஒரு இயந்திரம் வேலை செய்ய அது நன்றாக அமைக்கப்பட்டிருந்தால் மட்டும் போதாது.
மோட்டார் காரை எடுத்துக் கொள்ளவும், இயந்திர சாலையிலிருந்து எல்லாம் உண்டாக்கப்பட்டு
தொழில் புரியத்தயராகச் சேர்க்கப்பட்டு, அமைக்கப்பட்டு வெளிவருகின்றது.
உடனே தானாக, ஏறி உட்கார்ந்ததும் ஓட அரம்பித்து விடாது.
இந்த மோட்டார் வேலை செய்ய, அதற்கு உயிரளிக்கும் இஞ்சின் ( சூட்டு இயந்திரம் ) சுழல
பெட்ரோல், எண்ணெய் வேண்டும். இந்த பெட்ரோல் எண்ணெய் தான் இதற்கு உணவு.
இந்த உணவிலிருந்து சூடு உண்டாகி, சக்தி பெருகி மோட்டார் கார் உழைக்கின்றது,
ஓடுகின்றது, உழைப்பின் வேகம், காலம் முதலியவைக்கத்தக்கபடி
இதன் உணவின் பிரமாணமும், மாறுபாடு அடைகிறது.