வாத பித்த, வாத சிலேஷ்ம நாடி லக்ஷணம்
வாத பித்த தோஷத்தில் நாடியானது சாஞ்சலியமாயும், பிரகாசமாயும், ஸ்தூலமாயும் கடினமாயும் நடக்கும்.
சிலேஷ்ம வாத ரோகத்தில் நாடியானது உஷ்ணமாயும் மந்தமாயும் நடக்கும்.
சிலேஷ்ம தோஷ வாத தோஷ உஷ்ணவாத தோஷ நாடி லக்ஷணம் …..
சிலேஷ்ம தோஷத்திலும் பிரபலமான வாத தோஷத்தில் நாடியானது தீக்ஷணமாயும், உஷ்ணமாயும் நடக்கும்.
உஷ்ணவாதத்தில் நாடி பிண்டத்தைப் போல் பௌத்தாகாரமாய் நடக்கும்.
வாத நாடி …..
வாதத்தில் நாடி சூக்ஷ்மமாயும், ஸ்திரமாயும், மந்தமாயும் நடக்கும்.
அதிகவாதத்தில் நாடி ஸ்தூலமாயும், கடினமாயும் சீக்கிரமாயும் நடக்கும்.
காம, குரோத, அபிகாத சுர நாடி லக்ஷணம் …..
காமம், குரோதம், மல,மூத்திர, நிரோதம், சிந்தை, அபிகாதம், முதலியவைகளால் சுரம் கண்டால்
நாடியானது உஷ்ணமாயும், அதிவேகமாயும் நடக்கும்.
துஷ்ட ரத்த வியாபக நாடி …..
துஷ்ட ரத்தமானது தேகத்தில் விருத்தியாகி அந்த ரத்தம் பச்யமானசயத்தில் இருக்கும்
மலத்ததுடன் சேரும். அப்பொழுது நாடியானது நடுவிரலில் நடக்கும்