பிராணாவை உடலைமைப்புகளே, தமக்குத் தாமே சரி செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கு
அவசியமாக என்ன வேண்டும்?
உணவு, ஒழுக்கம், உழைப்பு இம்மூன்றும் இயற்கைக்கு இணங்கி ஏற்பட்டு நடந்தால்,
பிராணா சமாதானத்தில் நின்று சரிசெய்யப்பட்டு, பிணி தடுக்கப்படுகின்றது.
நோய் வந்தபின் சிகிச்சையைத் தேடுவதைக் காட்டிலும், தேடியும் சிகிச்சை கிட்டாமல், இறப்பதைக் காட்டிலும்,
நோய் வராமல் தடுத்துக் கொள்ளுதலே மேலானது.
பகுத்தறிவு கொண்ட மனிதனுக்கு ஏற்றதானது, சுலபமானது, சுகத்தைப்பற்றிச் சுகிக்தது வாழ இயல்பானது.