லக்கினாதிபதி 11 – ல்நிற்க, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க, 5 – க்குடையவரை குரு பார்க்க, பிரபுவாக இருப்பான்.
லக்கினாதிபதி 9 – ல் நிற்க, 2 – க்குடையவர் 11 – ல் நிற்க, 2 – ல் குரு நிற்க, அன்னிய தேசம் போய் வாழ்வார்.
5 – க்குடையவர் லக்கினத்திற்கு 12 – ல் நிற்க, குரு திரிகோணத்தில் நிற்க, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க,
சந்திரன் குருவுக்கு திரிகோணமடைய உடனடி பலன்.
சரராசியில் 3 – க்குடையவர் நிற்க, சர ராசிக்குரியவர், லக்கினாதிபதி கேந்திரமடைய கல்வி, கீர்ததி உடையவர்.
9 – க்கு கேந்திரத்தில் 3 – க்குடையவர் நிற்க. அந்த ராசிக்குடைய வரோடு, சந்திரன் கூடி கேந்திரமடைய
அவரை சுக்கிரன் பார்க்க இரட்சிக்கும் தன்மை உடையவர்.
11 – க்குடையவரும் செவ்வாயும் கூடி ஒரு ராசியில் நிற்க, அந்த ராசிக்கதிபதி உச்சமடைய
அவரை சுக்கிரன் பார்க்க தனதான்ய பாக்கியம்.