3, 12 – க்குடையவர்கள் கூடி திரிகோணம் பெற்று 2 – க்குரியவர், புதனுக்கு கேந்திரம் பெற்றால்,
புலமை தன்மை, பல நூல்களை எழுதும் ஆற்றல், கதை, கவிதை, கட்டுரை, காவியங்களில் சிறப்பு,
கணிதம், ஜோதிடத்தில் வல்லவன்.
லக்கினாதிபதி கேந்திரம் அடைய அக் கேந்திராதிபதி திரிகோணமடைய, சந்திரன் ஆட்சி பெற,
12 – க்குரியவர் சந்திரன், குருவிற்கு கேந்திரத்தில் நிற்க, 5 – க்குரியோர் கேந்திரம் பெற வேத ஆகமம்,
வாகடவித்தை,கணிதம்,ஜோதிடம்,சித்தாந்தம் போன்றவைகளை கற்று சிறப்புடன் வாழ்வான்.
லக்கினாதிபதி திரிகோணம் பெற்று 2 – க்குரியவர் 11 – ல்இருந்து, 2 – ல் சுபர் இருக்க, அது சரராசியானால்
பல ஊர் சுற்றும் தேச சஞ்சாரியாவார். அன்னிய தேசத்திலிருந்து தனம் தேடி வருவார்.
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை பெறுவான்.
லக்கினம் உபய ராசியாக இருக்க, அதற்குரியவரும் உபயராசியில் 12 – க்குடையவருடன் சேர்ந்து இருக்க,
செவ்வாய் 4 – க்குடையவருடன் கூடி எங்கிருப்பினும் தன் சொத்துக்களை இழந்து ஊரை விட்டு
அன்னிய இடம் சென்று கடின உழைப்பால் உழலுவான்.
லக்கினாதிபதியும் 2 – க்குரியவரும் கூடி 6, 8, 12 – லிருக்க, 3, 9 – க்குரியவர் தொடர்பு பெற
எக்காலத்திலும் இவன் வாழ்க்கையில் உயர்வும், கீர்த்தியும் பெற முடியாது.