எதுவரை மூச்சுக் காற்று உடலில் ஓடிக்கொண்டிருக்கிறதோ அதுவரை
வீட்டில் உன்னுடைய நலத்தைப் பற்றிக் கேட்பார்கள்.
மூச்சுக்காற்றுப் போய் உடலுக்கு அபாயம் ஏற்பட்டால் மனைவி கூட அவ்வுடலைக் கண்டு அஞ்சுவாள்.
காமசுகத்திற்கு எவன் வசப்படுகிறானோ அவன் நோய் வாய்ப் படுகிறான்.
மரணம் ஒன்றே முடிவு என்று கண்டும் ஒருவனும் பாவத்தினின்று விலகுவதில்லை.