பிறக்கும் பொழுதே நொண்டி, கண், செவி, வாய் போன்ற கருவிகள் வேலை செய்யாமல் பிறக்கும் ஜென்மங்கள்,
பிணியாளர் வர்க்கத்தவர் அல்லர், அங்கம் இல்லாவிட்டால், கண்கள் இல்லாவிட்டால், செவி கருவியற்றிருந்தால்,
பேசும் நாவே உயிரிழந்திருந்தால் உடல் சிகிச்சை செய்யக்கூடியது அதிகமில்லை.
ஆனால், சுந்தர யோக சிகிச்சையின் ஒரு அங்கமான துதி சிகிச்சையால்
இதையும் இவர்கள் சரிப்படுத்திக் கொள்ள முடியும்.
நமது சரித்திரங்கள் இதிகாச புராணங்கள், பக்தி மார்க்கம் ஆகியவை இக்கூற்றுக்கு ஆதாரம்.
ஆனால் பிறவியிலேயே நாக்கு, மூக்கு, வாய், கண், சர்மம், மூளை, வேலை செய்யாமலிருந்தால்
இந்த ஊனம், ஒரு பகுதி, யோக சிகிச்சையால் சரிசெய்ய முடியும்.
ஒழுக்கத்துடன் வாழுகிறவனை தொத்து நோய்கள் பற்றினால், அவன் மேல் பிழை என்ன?
அவன் கதி? இப்படி இந்நோய்கள் தொத்துவதும் நமது எச்சரிக்கை இன்மையால் பெரும்பாலும் உண்டாகும்.
அப்படி நோய் தாக்கினாலும் இவனுடைய திடம், ஒழுக்கம், இயற்கை வாழ்க்கை அபாயமின்றிக் காப்பாற்றும்.