31) 1 – க்குரியவர், 9 – க்குரியவர் சாரம் பெற்று 1, 4, 7, 10 – லிருந்து குருவால் பார்க்கப்பட்டால்,
இவர் தசாபுத்தி நல்ல யோகத்தை தரும்.
32) லக்கினாதிபதி, 9 – க்குரியவர் நின்ற வீட்டிற்கு 5, 9, 11 – லிருப்பின் என்றும் பாக்கியம் உள்ளவன்.
ஏதோ ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும் தரித்திரம் இல்லாதவன்.
தெய்வ அருள் பெற்றவன். பலருக்கு ஏதோ ஒரு வழியில் உதவியாக இருப்பான்.
33) 1 – ல் ராகு இருந்து, 1 – க்குரியவரையும் லக்கினத்தையும் 3 – க்குரியவர், அல்லது பாவர் பார்த்தால்,
இவர்கள் தசாபுத்தி காலங்களில் நரம்பு, வாய்வு, கண் போன்ற தொல்லைகளால் நோய் ஏற்படும்
தகாத பெண்களின் உறவை உண்டாக்கும்.
34) லக்கினாதிபதி, அல்லது லக்கினம், 5 – க்குரியோர் சாரம் பெற்று இருப்பின்
நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வாழ்வான்.
அதே 5 – க்குரியவர் சந்திரனுக்கு 4, 7, 10 – லிருந்தால், நல்லபூமி, வாகனம் சொத்து சேர்க்கை ஏற்படும்.
35) லக்கினத்தில் 3, 12 – க்குரியவர் பாதகாதிபதி சேர்க்கை பெற்று பாதகாதிபதி திசை நடந்தால்
பெரும் தன நஷ்டம் ஏற்படும். கடன் வேதனைகளும், உடன் பிறப்பால் பல தொல்லைகளும் காணும்.