21) உடல், உயிராதிபதிகள் வாங்கிய சாராதிபதி எந்த பாவத்தில் உள்ளதோ,
அந்த பாவத்தின் குணங்களே அந்த ஜாதகருக்கு எற்படும்.
22) 1 – க்குரியவர் சந்திரன் சாரம் பெற்று, சந்திரன் பெற்ற சாரநாதன் 1- ல் இருப்பின்
சதா வெளியில் பிரயாணம் செய்பவன் பெரிய செலவாளி, ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவன்.
23) 1 – ல் 2, 4, 9 – க்குரியவர் சேர்க்கை இருந்து 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றால்
தனமெல்லாம் கடன் கொடுத்து இழந்து போவான்.
24) 1 – க்குரியவர் 3 லிருந்து, 3 – க்குரியவரின் தொடர்பு பெற்று 9, 10 – க்குரியவர் லக்கினத்தைப் பார்த்தால்,
சினிமா, டிராமா, கூத்து போன்றவர்களில் முன்னணியில் வருவார்.
25) 1 – ல் புதன், இவருக்கு சனியின் தொடர்பு கிடைத்து, 7 – ல் செவ்வாய் இருந்து,
1 – க்கரியவர் உபய ராசியில் இருந்தால் அன்னியர் வீட்டில் வளருவான், அல்லது தத்து போவான்.