16) 1 – க்குரியவர் பாதகம் பெற்று, பாவருடன் சேர அவரை பாவர் பார்க்க பிறந்தவன்.
துர்குணம், கெட்ட நடத்தை, தாய், தந்தை பேச்சை கேட்காமை, ஊதாரியான செலவுகளை செய்பவன்.
17) 1 – ல் 2 – க்குரியவர் கேது சேர்க்கை பெற்று குருவால் பார்க்கப்பட்டால் மனக்கட்டுப்பாடு அதிகம் உண்டு.
நல்ல வாக்குள்ளவன் ஆன்மீக வாழ்க்கையில் விருப்பம் உள்ளவன்.
18) 1 – ல் 4, 5 – க்குரியவர் இருந்து, 9 – க்குரியவர் நல்ல நிலையில் பலம் பெற்றால், பெரும் செல்வந்தர்
குடும்பத்தில் பிறப்பான். அல்லது நல்ல கௌரவமான குடும்பத்தில் பிறப்பான்.
தெய்வ பக்தி உண்டு. 4 – க்குரியவர் தசாபுத்தி காலம் நல்ல யோகத்தை தரும்.
19) உடல், உயிராதிபதி பலம் பெற்று சுயசாரம் அல்லது சுபர் சாரம் பெற்று இருப்பின்,
தெய்பக்தி, பொறுமையுடன் தொல்லைகளை சமாளித்தல்,
எந்த நிலையிலும், போராடி காரியத்தை சாதித்துக் கொள்வார். தீய பழக்கம் இருக்காது.
20) 1 – க்குரியவர் 3 – க்குரியவர் பரிவர்த்தனம் பெற்று, 1 – ல் சுக்கிரன் இருப்பின்
அழகிய தேகம், கலைத்துறையில் ஆர்வம், கவிதை,
கதை, கட்டுரைகளில் ஆற்றல் ஏற்படும். சிறந்த நடிகராவார்.