6 ) 1- க்குரியவர் 3, 6, 8 – இல் 5 – க்குரியவர் 12 – ல் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும்,
3 – ல் லக்கினாதிபதி சுக்கிரன், புதன், சேர்ந்து சனியால் பார்க்கப்பட்டு இருந்தாலும்
உடல் எச்சுகத்தையும் அனுபவிக்காத நிலை ஏற்படும்.
7 ) 1 – இல் 3, 6 – க்குரியவர், கேது சேர்க்கை பெற்று 5, 10 – க்குரியவரால் பார்க்கப்பட்டால்,
3, 6 – க்குரியவரின் திசையில் அனேக சொத்தை விரையம் செய்வார்.
நோய்த்தொல்லை, கடன் பகையும் சேரும்.
8 ) 1 – ல் பாக்கிய விரையாதிபதி இருந்து, மாந்தி சேர்க்கை பெற்று, 1- க்குரியவர் 3, 6, 8, 12 – லிருப்பின்
வீட்டிற்கு அடங்காமை, தாய், தந்தை சொல் கேளாமை, திருட்டு குணம் உடையவன்.
அரச தண்டனைகள் பெறுவான்.
9 ) 1 – ல் 5, 4 – க்குரியவர் சேர்க்கை, 11 – ல் 2 – க்குரியவர் இருந்தால்
பெரும் செல்வந்த குடும்பத்தில் ஜெனனம் ஏற்பட்டு பலவகை சுகங்களை அனுபவிப்பார்.
10) 1 – ல் 5, 7 – க்குரியவர் சேர்க்கை, 2 – க்குரியவர் 2 லிலோ, 2 – ஆமிடத்தை பார்ப்பதோ
மிகுந்த சிறப்பைத் தரும். மனைவி வகை செல்வம், அதிகாரம் கிட்டும்.