1 ) 1 – க்குரியவர், கேந்திர, திரிகோணங்களில் இருந்து, இன்னொரு கேந்திர திரிகோணாதிபதியோடு சேர்ந்து
இருந்து, சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகத்தால் பார்க்கப்பட்டால்,
அந்த ஜாதகர் செல்வம், செல்வாக்கில் குறையின்றி சர்வ சுகங்களையும் அனுபவிப்பார்.
( மேற்படி கிரகங்கள் எந்த வகையிலும் கெடாமல் இருக்க வேண்டும். )
2 ) 1 – ல் புதன், சனி, சேர்க்கை, பாவர் பார்வை – அழுக்கடைந்த விகாரமான சரீரம் உள்ளவன். கெட்ட காரியத்தில்
நாட்டம் உண்டு. வித்தை, தனம், வாகம், சுகங்கள் குறைவுபடும்.
3 ) 1 – க்குரியவர் சுக்கிரன், 4 – க்குரியவர் லக்கினத்திலிருந்தால் நல்ல யோகத்தை தருகிறது.
4 ) 1 – இல் சூரியன், குரு, புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தார தோஷம் உள்ளவன்
பெண்களால் தொல்லைகள் உண்டு.
5 ) லக்கினம், அல்லது 1 – க்குரியவரை, சனி, சந், செவ், இவர்கள் ஏக காலத்தில் பார்த்தால்,
உடலில் ஊனம் ஏற்டும். இவரோடு புதன், சனி, 3, 6 – க்குரியவராகி
1 – க்குரியவருடன் சேர்ந்து, 3, 6, 8, 12 – ல் இருந்தாலும் மேற்படி பலன்.