சுவாலவத மிருத்தியு நாடி லக்ஷணம் …… அஸ்தத்தில் நாடிகள் தங்கள் இடத்தைவிட்டு வேறு
நடந்துக் கொண்டிருந்தாலும் அல்லது இல்லாமலிருந்தாலும் இருதயத்தில் தீவிரமான
உண்டாகி இருந்தாலும் அந்த புருஷன் அந்த எரிச்சல் அடங்குகிறதற்கு முன்பாகவே ஏகுவான்.
அரை ஜாமத்தில் மிருத்தியு நாடி லக்ஷணம் ….. அங்குஷ்டமூலத்தில் நடக்கும் நாடிகள் சுவஸ்தானத்தை
விட்டு இரண்டரை அங்கலத்திற்கு கீழாக, நடுவிரல், பவித்திரவிரல் இந்த விரல்களில் நாடி
காட்டிக்கொண்டிருந்தால் அந்த புருஷன் அரைசாமத்திற்குள்ளாக மரணமடைவான்.
வேறு விதம் ….. நாடிகள் அங்குஷ்ட மூலத்தை விட்டு இரண்டரை அங்குலத்திற்கு கீழாக
நரம்பைச்சேர்ந்து நடந்துக் கொண்டு இருந்தால் அவனும் அரைசாமத்திற்குள்ளாக மரணமடைவான்.
ஒண்ணரை ஜாமத்தில் மிருத்தியு நாடி லக்ஷணம் ….. நாடிகள் தர்ஜனி, மத்தியமா விரல்களைவிட்டு நீங்கி
அநாமிகை விரலில் ரேகாகாரமாய் சஞ்சரித்துக்கொண்டு இருந்தால் அவன் ஒண்ணரை சாமத்திற்குள்ளாக
மரணமடைவான்.
ஆறு ஜாமத்தில் மிருத்தியு நாடி லக்ஷணம் ….. அங்குஷ்ட மூலத்தின் நாடிகள் எல்லாம் மத்திமா
அடிவிரல் நரம்பில் சேர்ந்து சூக்ஷமமாய் நிச்சலமாய் இருக்குமாகில் அவன் ஆறு ஜாமத்திற்குள்
மரணமடைவான்.
திரிதினமிருத்தியு நாடி லக்ஷணம் ….. கால் விரல்களிளுள்ள நாடிகள் அதிசாஞ்சலியமாய் நடந்தால் மூன்று
நாடிளக்குள் மரணம் சம்பவிக்கும்.
சதுர் தினமிருத்தியு நாடி லக்ஷணம் ….. நாடிகள் கால் விரல்களில் சேர்ந்து கொஞ்சம் உஷ்ணமாக
அதிசீக்கிரத்தில் நடந்துக்கொண்டிருந்தால் நாலு நாட்களில் மரணம் சம்பவிக்கும்.
பஞ்சதின மிருத்யு நாடி லக்ஷணம் ….. பாதங்களுக்கதமான நாடி அதிமந்தமாய் நடந்தால் ஐந்து
நாளுக்குள் மரணம் சம்பவிக்கும்.