பகலும், இரவும், மாலையும், காலையும், பனிக்காலமும், இளவேனிற்காலமும்
திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு காலம் விளையாடுகிறது,
வயது கழிகிறது, என்றாலும் காற்றுப்போல் வியாபித்திருக்கும் ஆசைமட்டும் மனிதனை விடுவதில்லை.
மதிமங்கியவனே!
மரண சமயம் நெருங்கிய பொழுது இலக்கணச் சூத்திரம் உன்னை ஒரு பொழுதும் காப்பாற்றாது.
ஆகையால் கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி.
எதுவரை பொருள் தேடுவதில் ஒருவன் பற்றுள்ளவனாயிருக்கிறானோ
அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை வைத்திருக்கும்.
நோயினால் உடல் தளர்ந்து போன பின்பு
அவன் உயிருடனிருந்தாலும் ஒருவரும் அவனுடைய சமாசாரத்தை விசாரிப்பதில்லை.