அசாத்திய ரோக நாடி ….. சந்நிபாத அசாத்திய நாடியானது மந்தமாயும், சிதிலமாயும் வியாகுலமாயும், நின்றும்
தீவிரகதியாயும் இல்லாததுப்போலும் தனது இடத்தை விட்டு கீழாகவும், மேலாகவும் விரல்களிலும்
நடையுடையதும் வேரானகதியுடையதாயும் நாடி நடக்கும்.
இதுவுமது ….. அதிகவேகமான பாய்ச்சலும், மிகவும் மந்தமாயும் தாமதமாயும் நரம்பைவிட்டு மாமிசதாதுவில்
சஞ்சரித்துக்கொண்டும் அதிசூஷ்மமாயும் வக்கிரமாயும் விவிதமாயும் நடக்கும் நாடி சந்நிபாத அசாத்திய
நாடியென்றும் அறியவும்.
மரண குறி நாடி ….. அதிக உஷ்ணமாயிருக்குங்காலத்தில் சீதளநாடியும், அதிக சீதளமாய் இருக்கும்போது
உஷ்ண.நாடியும், விவிதபேதங்களான நடையையும் உடையதாய் எந்த மனிதனும் நாடி நடக்குமோ அவன்
காலனது தண்டத்திற்காளாகுவான் அல்லது மரணமடைவான்.
சந்நிபாதமாண நாடி லக்ஷணம் ….. திரிதோஷங்களின் மிசிரகாலத்தில் நாடியானது சாஞ்சல்லியமாய் நடக்கும்.
மரணகாலத்தில் நிச்சலமாய் இருக்கும். இந்த பேதங்கள் சகல சந்நிபாத ரோகங்களில் தோணுமென்று
வைத்தியர்கள் அறியவண்டியது.
சாத்தியரோக நாடி லக்ஷணம் ….. நாடிக்கியானத்தை இலக்ககணவாயிலாக அறிந்த குறவர்கள் இந்த சாத்திய
நாடியானது முதலில் உஷ்ணமாயும், பிறகு வாதமாயும், அந்தியத்தில் கபமாயும் நடக்குமென்று சொல்லி –
இருக்கிறார்கள், அதாவது கொஞ்சகாலம் தீவிரமாயும், கொஞ்சநேரம் சஞ்சலமாயும் கொஞ்சநேரம் சூக்ஷ்மமாயும்
மந்தமாயும் நடக்குமாம். இந்த நாடி கதி¬யுடைய ரோகமானது சாத்தியம் என்று அறிய வேண்டியது.
மாசாந்தமிருத்தியு நாடி லக்ஷணம் ….. சரீரத்தில் சர்ப்ப வடிவான புலதா என்கிற நாடி விதிப்பயனினால்,
சீதளமானாலும் அல்லது சீரணமானாலும், அவன் ஒரு மாதத்தில் மரணமடைவான்.