4) 5 – ல் சூரியன், கேது, குரு சேர்க்கை இருப்பின் இவர்களை செவ்வாய் பார்த்தால் பொய் சாட்சி சொல்வதாலோ,
தர்மத்திற்கு விரோதமாக நடப்பதாலோ கெட்ட நடவடிக்கையாலோ வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டிவரும்.
குழந்தை இல்லாமல் வீட்டை பங்காளி எடுப்பார்.
5) லக்கினத்தில் ராகு, லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் அவர் பார்வை இல்லாமல் இருக்க,
லக்கினாதிபதி நீச்ச நவாம்சத்தில் இருப்பின் தன் வீட்டை விட்டு வேறு வீட்டில் போய் வசிப்பான்.
இவன் வீடு நியாயமில்லாத முறையில் பிறருக்கு போய் சேரும்.
6. குருவும், சந்திரனும் பரஸ்பர கேந்திரத்தில் ( 4, 7, 10 ) நீச்சமோ அஸ்தமனமோ– கெட்ட ஆதிபத்தியமோ பெறாமல்
இருந்தால்கெஜகேசரி யோகம். இவை இரண்டும் நவாம்சராசியில் 6, 8 – இல் ( அ ) அர்களத்தில் அமைந்து
விட்டால் இவ்யோகம் பயன் இல்லை. நவாம்சத்தில் நீச்சமும் பெறக்கூடாது.
*உச்சனை உச்சன் பார்க்கும்போது ஏற்படும் தோஷம், இரண்டு கிரகங்களுக்கும் பரஸ்பரம் 180 பாகைக்குள்
இருந்தால் மட்டுமே பாதிக்கும். உச்ச கிரகம் எத்தனையாவது பாதத்தில் உள்ளதோ
அதற்கு நேர் அத்தனையாவது பாதத்தில் அந்த உச்சகிரகம் இருக்க வேண்டும்.