லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் நின்ற எதிரிடை நட்சத்திரத்தில்
2 – ஆம் பாவாதி இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குடும்பத்தை விட்டு பிரிதல் பண தட்டுப்பாடு,
பணத்தொல்லை, கண் கோளாறு, பல வகையில் பாதிப்பு திருட்டு பயம், நீச்ச வார்த்தை பேசுதல்,
திக்கி பேசுதல், வாக்கு நாணயம் தவறுதல் வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படுதல்..
லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரங்கள் அதன் திரிகோண நட்சத்திரங்களில்
3 . ஆம் பாவாதி நின்றால் உடன்பிறப்பு வகையில் பகை, பிரயாணத்தில இடையூறு, உயிருக்கு உயிரான நண்பர்
இழப்பு, தகாத இச்சைகள், அதனால் அவமானம், தகாத, கெட்ட, பழைய உணவு வகைகளை உண்ணுதல், காரிய
தடை, வீரிய பலம் கெடுதல், உடல்நிலை சரிவர இருக்காது. தனிப்பட்ட சுகங்களை பாதிக்கும். சகோதர வகை
பிரயோசனப்படாது. தொண்டை, காது சம்பந்தப்பட்ட வியாதிகள் தாக்கும்..