பிணியும், பிணி தடுத்தலும்
சுகத்திற்கே, வாழ்வு பிணிக்கல்ல!
ஈசன்
சுகத்திற்கெனறீன்றனே வாழ்வு
பிறவி,
சுகத்தைப் பற்றி சுகித்து வாழ!
பிணியால் வாடி வதையுறுவதற்கல்ல!
சுகம் நமது பிறப்புரிமை! சுகம் பெறவே எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன!
நம்மிடமிருந்து நம் இன்பத்தை தடுக்க எவராலும் முடியாது.
இறைவனாலும் முடியாது.
இறைவன் நாம் இன்பமாக வாழவே நம்மை படைத்திருக்கிறான்.
இறைவனா தடுப்பான்?
நம்மிடமிருந்து நம் இன்பத்தை, தடுப்பவன் நாமேதான்
அல்லாமல் இறைவன் அல்ல, பிறரும் அல்ல.
இந்த மாதிரி செயலுக்கு நமது அறியாமையும், சோம்பலும் ஆகும்.