எப்போதாவது ஒரு முறை தான் மனம் சந்தோஷமாக இருப்பது நமக்குத் தெரியவருகிறது.
எந்த விஷயத்தில் சந்தோஷம் வந்தது என்று குறித்து வைத்துக் கொண்டு
நாம் சில காலங்களுக்குப் பிறகு அதே விஷயத்தை நாம் அடைந்தாலும்
மனம் சந்தோஷமாய் இருப்பதில்லை,
ஏன்?
என்ன காரணம்?
என்று யாரேனும் இதை சிந்தித்தது உண்டா?
அப்படி இது சிந்திக்க வேண்டிய விஷயம் தானா?
வினா தான் உருவாகிவிட்டதே, இனி விடை தேடி பயணப்பட வேண்டியது தான்,
யாரேனும் துணைக்கு வருகிறீர்களா?
ம்ம், சரி நான் போகிறேன் விடை தேடி,
நீங்கள் மெல்ல 2 வடை சாப்பிட்டுவிட்டு மெல்ல வாருங்கள்.