கோள்களுக்கு ஆதாரமே நட்சத்திரங்கள்தானே. ஒருவரின் உயர்ந்த நிலை,
பதவி, கௌரவம், பணபலம், உடல்பலம் போன்ற எல்லாவற்றிற்கும்
நட்சத்திரத்தூண்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகும்..
ஒருஜாதகத்தைகையில்எடுத்துக்கொண்டோமேயானால், அந்த ஜாதகனின் நிலை
இப்படித்தான் என்பதை முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வழி வகுப்பது இந்த நட்சத்திரத்
தூண்களே. இந்த நட்சத்திரத் தூண்கள் பலம் இழந்து எதிரிடையான நிலையில் இருந்தால்
என்னதான்யோகவானாக ஜனித்து இருந்தாலும் அது செயல்படுவதில்லை என்பது
கண்கூடு. ஜாதகர் பிறக்கும் போது நின்ற கோள்களின் அடிப்படையான ஆதாரமான
ஊன்றுகோலான நட்சத்திரங்கள் ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான
நட்சத்திரங்களின் கோள்கள் நின்று விட்டால் அவ்வளவே..