ஜெய்முனி சூத்திரம் 8000, பெரிய வருஷாதி நூல் சினேந்திரமாலை, குமாரசுவாமியம், சுகர்
பிரம்மரிஷி வக்கியம், போன்ற பழைய பிரதிகளின்அடிப்படையில் சொல்லப்பட்டவைகளை
கையாண்டு பார்த்ததில் கிடைத்த முத்தை ஏன் மாணிக்கத்தைத்தான் உங்கள் முன்
வைத்துள்ளேன்.அதில் சொல்லிஉள்ள சின்ன விசயங்களை மிகைப்படுத்தி பார்த்த பொழுது
ஆச்சரியப்படும் அளவில் பலன்கள் கிடைத்தபோது இந்த கோலாட்டத்தை என்ன
சொல்வது..பல பெரிய யோகங்களை அடக்கிக் கொண்டுள்ள ஜாதகத்தை பார்க்கும் போது
அதற்குரியவர்நிலை… யோகத்திற்கும், ஜாதகருக்கும்சம்பந்தம் இல்லாத ஒன்றை
காண்கிறோம். அதே சமயத்தில் எந்தவிதமான யோகங்களையும் தன்னுள் அடக்கிக்
கொள்ளாத ஒரு ஜாதகத்தைப் பார்க்கும்போது, அதற்குரியவர்நிலைஆச்சரியப்படும்படியாக
உள்ளது..இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தின் நட்சத்திர தூண்களே. இத்தூண்களின்
அமைப்பைப் பொறுத்தே அனைத்தும் நிகழ்கிறது