சோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ள விசயங்கள் அனைத்தும் நடைமுறைக்கு
ஒத்து வருவதாக இல்லை. பலவகையான கணிதங்கள், ஆய்வுகள், செய்தும் பலன்கள்
தவறுவதை பார்க்கும் போது இந்த கோள்களின் கோலாட்டத்தை நினைக்கும் போது
புரியாத புதிராக உள்ளதை யாரும் மறுக்க இயலாது. இவ்வகை கோலாட்டத்தை
ஒரளவாவது எவ்வகையிலாவது தெரிந்து நடந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கும் பெரும்
வழிகாட்டியாக இருக்கும். ஜாதகத்தில்சொல்லப்பட்டுள்ள எத்தனை வர்க்க கணிதங்கள்
உண்டோ அத்துணை கணிதங்களையும் போட்டு பார்த்து பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள
பாடல்களை அனுசரித்து பலன்களை சொல்லும்போதும் பலன்கள் பிசகி விடுவதைப்
பார்க்கிறோம். இதற்கு எங்காவது ஒரு வழி தென்படுமா என்ற ஆதங்கத்தோடு வாசி
நிலையில் இருந்து பார்த்தபோது ஒரு வழி தென்பட்டது..
அவ் வழியின் முழுவடிவமே இந்த நூல் என்றால் மிகையாகாது. ஒரு சின்ன விசயத்தில்
பெரும் ரகசியமே அடங்கி உள்ளதைப் பார்க்கும்போது இது கோள்களின் கோலாட்டமே
என்பதுஉறுதியாகிறது. பல வகையான ஆராய்ச்சிகள், நூல்களின் ஆதாரங்கள், எல்லாம்
ஒரு சின்ன சமாசாரத்தில் பறந்து விடுகிறது. எனில் இந்த கோள்களின் கோலாட்டத்தை
என்னவென்று சொல்வது..