* நம் கண்களுக்கு ஒரு விதமான காந்த சக்தியையும் எலும்புகளுக்கு பலத்தையும் உடலை
இயக்கும் ஆன்மாவாக உடலை உருவாக்க காரணமாக, தந்தை என்ற தகுதியோடு
செயல்படும் சூரியன்….
* உடலுக்கும், மனத்திற்கும், எண்ணங்களுக்கும் தாய்க்கும் அதிபதியாக சந்திரன்
நின்று இயங்குகிறார். இவர் மிகவும் துரிதமாக செயல்படும் கிரகமாகும். க்ஷண நேரத்தில்
மனிதனின் மனதை மாற்கும்தன்மை உள்ள இவர் செய்யும் வினோதங்கள் பல.. பல..பல…
* வீறு கொண்டு செயல்பட செய்யும் தைரிய பராக்கிரம சாதுர்யம் உஷ்ணத்தை ஏற்றும்
கோபத்தை தோற்றுவித்து இரத்த வேகத்தை அதிகப்படுத்தும் சகோதரகாரகர் என்ற
பொறுப்பை ஏற்று செயல்படும்பூமகன் செவ்வாய்
நகைச்சுவை நரம்புகளை முறுக்கேற்றும் நிலை அறிவாற்றல் பலவகையான
சூழ்நிலைகளிலும் அதற்கு தகுந்தாற்போல்நடந்து கொள்ளும் ஆற்றல்
தாய்வகை மாமன் என்ற தகுதியை பெற்ற புதனின் மர்மம்..
* உடலின் தலைமையகமாக இருந்து செயல்படும் மூளையை கொண்டு செயல்படும் காரண
காரியங்களுக்கும் போக பாக்கியமான உடல்உறவிற்கும் வம்சவிருத்திக்கும், ஆஸ்திக
தன்மைக்கும் பணம் என்ற பெரும் தகுதிக்கு உரியவராக குரு
காம உணர்வு, உல்லாசம், அழகுபடுத்திக் கொள்ளும் தன்மை மதியை மயங்கச் செய்யும்
உணர்வுகளுக்கும் கணவன்,மனைவியை அழைத்து வரும் பொறுப்பாளராகவும் நின்று
இயங்கும் சுக்கிரன் தன் லீலா வினோதங்களை நடத்தும் பாங்கே தனி..