‘‘அரிது அரிது மானிட பிறவி கிடைத்தல் ’’ என்ற பெரும் பேற்றை பெற்ற இம் மனித பிறவியை நவக்கிரகங்களின் கதிர்வீச்சு காற்றில் கலந்துசுவாசத்தின் மூலம் மனித தேகத்திற்குள் சென்று தோற்றுவிக்கும் விசித்திரங்கள் தான் எத்தனை எத்தனை… பராசக்தியின் படைப்பில் எவ்வளவோ மாற்றங்கள், விசித்திரங்கள், வினோதங்கள் இவையெல்லாம் எப்படி எவ்விதத்தில் நிகழ்கின்றன என்பதை சிந்தித்துப்பார்த்தால் சிந்தனை தான் சிறகடித்து பறக்குமே ஒழிய நிலையான முடிவிற்கும் இடத்திற்கும் வரமுடிவதில்லை. இதேபோல் அத்தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நவநாயகர்கள் நடத்தம் வினோத விசித்திரங்களை காணும்போது மிகவும் ஆச்சரியமும் ஆராய்ச்சிக்குரியதாகவும் உள்ளது. நவக்கிரகங்கள் நம்மை பல கோணங்களிலும் இயக்கி நன்மை தீமைகளை அடை செய்கின்றன. இதே போல் நம் உடல் உறுப்புகளையும் இயங்க செய்கின்றன..