மேஷ ராசியில் சந்திரனும், மீன ராசியில் புதனும்,விருஷபத்தில் அங்காரகனும் இருப்பதாக
வைத்துக்கொள்வோம். புதன் மீன ராசியில் நீசம்பெற்றதாலும் சுக்கிரனுடைய ராசியில்
அங்காரகன்இருப்பதாலும் இந்த அங்காரக புதர்களால் ஏற்படும்குற்றங்குறைகள்
ஜாதகனிடத்தில் அதிகப்படியாகஇருக்குமென்று ஊகிக்கலாம்.அங்காரகன் சுக்கிரனுடைய
ராசியிலோ,சுக்கிரனுடைய நவாம்சத்திலோ சுக்கிரன் இருந்தாலும்,ஜாதகன் பொதுவாக
அதிகாமியாகவும், பரஸ்திரீகமனமுள்ளவனாகவும் இருப்பானென்பது இவ்விதம்அங்காரக
புதர்களால் ஏற்படும் தோஷ பலன்கள்அவர்கள் தங்களுக்குரிய அசுபராசிகளில் இருந்தால்
அதிக்கிரமித்தும், அவர்கள் தங்களுக்குரிய சுபராசிகளிருந்தால் தோஷங்கள் ரொம்பவும்
குறைந்தும்நடைபெறும்.
கிரகங்களின் ராசி, பாவ சம்பந்த, வீக்ஷண, சுபா சுபத் தன்மையைக்கவனித்தே ஒவ்வொரு
யோகத்திற்கும் உபதேசித்துள்ளபலன்கள் அதம, மத்திம, உத்தம என்ற பிரிவுகளுள்
எம்முறையில் நடைபெறுமென்பதை ஊகித்து அறியவேண்டும்.
அங்காரகனுக்கும் குருவிற்க்கும் மத்தியில்சந்திரனிருந்தால் ஜாதகன் யஸஸ்வீயாகவும்
தன்னுடைய வீரியத்தினால் அடைந்த தனமுள்ளவனாகவும இருப்பான் ஆயினும் சத்துரு
பீடையும்ஏற்படும். இவனுடைய நல்ல ஒழுக்கத்தினாலேயேஇவனுடைய கிரகத்தில்
மற்றவர்களும் அவனைப்போல் நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்.
அதாவது இவனுடைய ஒழுக்கத்தைக்கண்டு இவனைச்சேர்ந்தவர்களும்
தார்மீகர்களாக ஆவார்கள்.