பொதுவாக சுனபா யோகத்தில் பிறந்தவன்அரசனாகவோ, அல்லது அரசனுக்கு
ஒப்பானவனாகவோ இருப்பான். நல்ல கீர்த்தி, தனவரவு, தீக்ஷண புத்தி, இவைகளுடன்
கூடியவனாகவுமிருப்பான். அனபா யோகத்தில்பிறந்தவன் பிரபுவாகவும், சுகவானாகவும்,
கியாதியுள்ளவனாகவும், ரோக மற்றவனாகவும் இருப்பான்.இவ்விதம் ஜாதக தத்வமென்ற
ஜோதிஷ நூல் என்று சொல்கிறது
சந்திர லக்னத்திற்கு இருபுறமும் அதாவது 2 – வது12 – வது ராசிகள் இரண்டு இடங்களிலும்
கிரஹங்கள்இருந்தால் துருதுரா யோகமெனப்படும். பொதுவாகதுருதுரா யோகத்தில்
பிறந்தவன் தன, வாகனாதிசுகமுள்ளவனாகவும், கிடைத்த விஷயங்களின்
அனுபவத்தினால் உண்டான சுகத்தைஅனுபவிக்கிறவனாகவும் இருப்பான் ( உத்பன்ன
போக சுக பாக்கிய என்பது மூலபாடம் ).துருதுரா யோக பலன்களைச் சற்று விவரமாக
ஆராய்வோம். சந்திர லக்னத்திற்கு இரு புறங்களிலும்அங்காரகன், புதன் இவர்களிருந்தால்
அசத்தியவாதியாகவும், ஆயினும்விஷயஞானமுள்ளவனாகவும்,பேராசையுள்ளவனாகவும்
கெட்டநடத்தையுள்ளவிருத்த ஸ்திரீகளுடன்சேர்ந்தவனாகவும் இருப்பான்.