சந்திர லக்னத்திற்கு விரையஸ்தானமான 12 – வது ராசியில்இருக்கக்கூடிய குஜாதி
பஞ்சக்கிரஹங்கள் மூலம்ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய பலா பலன்கள்சந்திர லக்னத்திற்கு
12 – வது ராசியில் அங்காரகன் இருக்கும்பொழுது ஜனித்தவன் யுத்தசேவையில்
பிரியமுள்ளவனாகவும்,குரோதியாகவும் அதாவது கோபியாகவும், திருஷ்டஸ்சோர
ஜனப்பிரபுவாகவும்அதாவது துஷ்ட ஜனங்களுக்குத் தலைவனாகவும், தீரனாகவும்
இருப்பான். இங்கே அங்காரகன் சந்திர லகனத்திற்கு 12 – வதுராசியில் இருப்பதற்குரிய
பலன்களைப் பொதுவாகச்சொல்லியிருப்பினும் அந்தந்த ராசியின் தன்மையைஅனுசரித்தே
பல நிர்ணயம் பண்ணவேண்டும்.உதாரணமாக சிம்ம சந்திரனுக்கு 12 – வது ராசியான
கடக ராசியில் இருக்கும் அங்காரகன் மூலம் ஏற்படும்அநபா யோக பலன்களுக்கும், கும்ப
சந்திரனுக்கு 12 –வது ராசியான மகர ராசியிலிருக்கும்அங்காரகனுக்குரிய அநபா யோக
பலன்களுக்கும்வெகுவான வித்தியாசங்கள் உண்டென்பது நன்குவிளங்குகிறது.
சந்திர லக்னத்திற்கு 12 – வது ராசியில் புதன்பலத்துடனிருந்தால் சங்கீதம், சித்திரம் இந்த
சாஸ்திரங்களில் வித்பத்தியுள்ளவனாகவும்,வாக்மீயாகவும், ராஜ பூஜ்யனாகவும், அரசர்கள்
அரசசமானர்கள் பெரிய உத்தியோகஸ்தர்கள் இவர்களால்சிலாகிக்கப்பட்டவனாகவும்
யஸ்ஸ்வியாகவும் இருப்பான்சந்திர லக்னத்திற்கு12-வது ராசியில் குரு பலத்துடனிருந்தால்
ஜாதகன் ராஜ பூஜியனாகவும்,அதி மேதாவியாகவும், காம்பீரிய குணசத்வவானாகவும்,
தனாட்டியனாகவும் இருப்பான்.சந்திர லக்னத்திற்கு 12 – வது ராசியில் சுக்கிரன் இருந்தால்
ஸ்திரீகளுக்கு பிரியனாகவும், பசுக்கள்உள்ளவனாகவும், புத்தி தீக்ஷண்யனாகவும், தன
தான்யாதிகளுள்ளவனாகவும் இருப்பான்.சந்திர லக்னத்திற்கு 12 – வது ராசியில் சனி
இருக்கும் பொழுது பிறந்தவர்கள் விஸ்தீரண பாகுள்ளவனாகவும் அதாவது நீண்ட கைகள்
உள்ளவனாகவும்குணவானாகவும், பசுக்கள் உள்ளவனாகவும், முக்கிய ஸ்தாபனங்களை
வகிப்பவனாகவும், பலர்ஆமோதிக்கக்கூடிய அபிப்பிராயங்களுள்ளவனாகவும்
இருப்பான். ஆனால் கெட்ட ஸ்திரீயுடன் சேர்ந்தவனாக இருப்பான். அதாவது பர ஸ்திரீ
கமனமுள்ளவனென்றோ அல்லது துஷ்ட பத்தினியுள்ளவனென்றோ இருக்கவும்
கூடுமென்று சிலர்ஊகிக்கிறார்கள்.