சந்திரனுக்கு இரண்டில் குஜன் பலத்துடனிருந்தால்ஜாதகன் பூபதியாகவும் ( அரசனாகவோ,
அல்லதுமிகுந்த செல்வாக்குள்ளவனாகவோஆகலாமென்பதும் பொருள் கொள்ளலாம். )
குரூரசுபாவமுள்ளவனாகவும், டாம்பீகனாகவும்,மனேபலமுள்ளவனாகவும்
தனம்விக்கிரமம் உள்ளவனாகவும், கோபியாகவும்இருக்கக்கூடும்.சந்திரனுக்கு
இரண்டாவது இராசியில் புதன்பலத்துடன் இருந்தால் வேத சாஸ்திரங்களிலும், சங்கீத
முதலான சாஸ்திரங்களிலும் தேர்ச்சியுள்ளவனாய்இருக்கக்கூடும். மனஸ்வீயாகவும், இத
வாக்குள்ளவனாகவும், தார்மீகனாகவும் இருக்கக்கூடும் சந்திரனுக்கு இரண்டாவது
இராசியில் குருபலத்துடனிருந்தால் சர்வ வித்தைகளிலும் தேர்ச்சிஉள்ளவனாகவும்,
ஸ்ரீமானாகவும் ( சௌக்கியமுள்ளவனாகவும் ) குடும்பியாகவும் அரசனுக்கு
வேண்டியவனாகவும், இராஜத்துல்லியவனாகவும்,யஸஸ் ( கீர்த்தி ) உள்ளவனாகவும்
இருக்கக்கூடுமென்பர்.சந்திரன் இருக்கும் இராசிக்கு இரண்டாவதுஇராசியில் சுக்கிரன்
பலத்துடன் இருந்தால் விக்கிரமமுள்ளவனாகவும், களத்திரசுகமுள்ளவனாகவும்,
தணிகனாகவும், க்ஷத்திரமுள்ளவனாகவும், ( பூமியென்றும் சொல்லலாம் ) முயற்சி செய்து
கொண்டிருப்பவனாகவும் இருக்கக்கூடுமென்பர்.( தனக்ஷத்திர கர்மவான் என்று மூல பாடம்
கன்றுகாலிகள் உள்ளவனாகவும், அரசனைப்போல் சுகம்உள்ளவனாகவும்
இருக்கக்கூடுமென்பர்.சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் பலத்துடன்சனி இருந்தால்
ஜனங்களால் புகழப்படுகின்றவனாகவும், தனவானாகவும் புத்தி தீக்ஷண்யமுள்ளவனா
கவும், எக்காரியங்களையும் சாதிப்பதில் நிபுணனாகவும் இருப்பார்கள்.