சூரியன் தவிர சந்திரன் இருக்கிற இராசிக்குஇரண்டாவது இராசியில் கிரகங்கள் இருந்தால்
சுனபாஎன்ற யோகமும், பன்னிரண்டாவது இராசியில்இருந்தால் அனபா என்ற யோகமும்
இரண்டிலும்பன்னிரண்டிலுமிருந்தால் துருதரா என்ற யோகமும்சந்திரனுக்கு இரண்டாவது
ராசியிலும்,பன்னிரண்டாவது ராசியிலும் கிரகமேஇல்லாவிட்டால் கேமத்துரும என்ற ஒரு
அசுபயோகமும் ஏற்படுகின்றன.இவ்விதம் சந்திரனுக்கு இரண்டாவதுபன்னிரண்டாவது
இராசியில் இருக்கிற கிரகங்கள்பூர்ண பலத்துடனிருந்தால் அதற்குத் தகுந்தபடி
பலன்கள் நடக்குமென்று கூறுவர். இது சாமானியமான விதியாகத் தோற்றினும் இந்த
யோகத்திற்குச்சொல்லிய பலன்கள் அனுபவத்திற்கும் சரியாகவேஇருக்கின்றன.
மீன இராசியில் இருந்து அதற்கு இரண்டாவதான மேஷ இராசியில் இருக்கிற சனியினால்
ஏற்படும்சுனபாயோகப் பலன்கள் அற்பமாகவே ஆகுமென்பது சனி மேஷ இராசியில்
நீசமடைந்த காரணத்தால் சுனபா யோக பலன்களை பூரணமாக கொடுக்க
முடியாதவனாகிறான்என்பதே இதன் காரணம்.கன்னியா ராசியில் சனி இருந்தால்
சனிக்குரிய சுனபாயோக பலன்கள் பூர்ணமாக நடைபெறுக்கூடுமாம். துலாராசி சனிக்கு
உச்சஸ்தானமாகஇருப்பதே இதற்கு பிரதம காரணம்.