ஜாதக பலன்களை அறிவதற்குரியசித்தாந்தப்படி லக்கின கிரகஸ்புடாதிகளை கணித்துக்
கொண்டு ஸ்ரீபதி தம்முடைய பத்ததியில் உபதேசித்துள்ளபடி,
1. பாவஸ்புடம், 2 – கிரக ஷ்ட்பலம்,அதாவது ( ஸ்தான, ஜேஷ்டா, அயன, கால, திக்,
திருக்,ஆகிய இவ்வாறு பலமும் ), 3. சகமஸ்புடம், 4.அஷ்டக வர்க்கம், 5.ஆயுர்த்தாயம்
இவ்வைந்தையும்கணித்துக் கொண்டு பலாபலன்களையறிவது
சாஸ்திரீய மென்றும், சந்தேகத்திற்கு இடம் ஏற்படாதமுறை யென்றும் சொல்வர்.
பிராணன் என்றுசொல்லப்பட்டுள்ள உதய லக்கினம், சரீரகாரகன்என்று பெயர் பெற்ற
சந்திரன் இருக்கும் லக்கினம்,ஆத்மகாரகனான சூரியன் இருக்கிற கிரகங்களின்
பலத்தை அறிய வேண்டுமென்பதைப் பராசரமஹரிஷி தமது ஹோரா சாஸ்திரம்
பூர்வகாண்டம்இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் உபதேசிக்கிறார்.
அவருடைய வழியைப் பின்பற்றினவர்களான வராஹமிஹீரர், மந்திரேசுவரர்,
வைத்தியநாததீக்ஷிதர்,கலியாணவர்மன், துண்டிராஜன் இவர்களும்
தங்களுடைய நூல்களின் விரிவு படுத்தியிருக்கிறார்கள்.