மனம் ஒருமைப்படாவிட்டாலும் தூய மந்திரத்தை ஜபிப்பதை விட்டுவிடவேண்டா. உங்கள் கடமையை நீங்கள் ஆற்றுங்கள். இறைவனது பெயரை ஓதும் போதே, காற்று அடியாதபடி தடுக்கப்பட்டுள்ள ஒரிடத்தில் உள்ள விளக்கின் சுடரைப் போல், மனத்தானாகவே ஒருமைப்படும். காற்றே சுடரை ஆடச் செய்கின்றது. அதுபோல், நம்மிடத்துள்ள பாவனைகளும் விருப்பங்களுமே நமது மனத்தை அமைதியற்ற தாக்குகின்றன. காற்று மேகத்தை அடித்துச் செல்வதுபோலவே, இறைவனது திருநாமம் நமது மனத்தைச் சூழ்ந்துள்ள உலகப்பற்று எனப்படும் மேகத்தை அழிக்கிறது. கடுந்தவம் பழகிய பிறகே மனம் தூயதாகின்றது. ஒழுங்காகச் சாதனை பழகாது ஒரு பயனையும் அடைய முடியாது. தூய்மையும், மலமும் ஒன்றாகக் கலந்தே மனத்திலிருக்கின்றது. ஒருவன் பிறரிடத்துக் குற்றம் காணும்போது, முதலில் அவன் மனம் மாசடைகின்றது. பிறரிடத்துக் குற்றம் காணுவதால் ஒருவன் எப்பயனை அடைகிறான்? அவன் அதனால், தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். சிறுவயது முதற்கொண்டே நான் பிறரிடம் குற்றம் காண்பதில்லை, அந்த ஒன்றை என்றும் என் வாழ்நாளில் கற்றதும் இல்லை. Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaJune 1, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஉலகப்பற்றுகாற்றுபாவனைமனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 9 கோள்களின் கோலாட்டத்தின் படி ..NextNext post:அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 12அன்ன ரச விவரணம்Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023