”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந்
தேவர்கட்கிரை வனுஞ்சுபராய்
கோளாறு சேய் மாலுசனனுமதர்
குபேரனுமி ரவியும் யோகர்
கேளுடன் கூடிலி ராஜயோக மதாங்
கிளத்தியவசுபர் மாரகராய்
நாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார்
நங்கையற்கினிய தெள்ளமுதே ” (யவண காவியம் ).
”புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர்
இந்து வாரத்தனே யேந்தினழயாய் – சந்ததமும்
நல்லனிஞ் ஞால நலனறிப்போன் ஞாயிறுடன்
அல்லவனுமாகவறு ” ( தாண்டவமாலை )
” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே
இயன்ற பாவர் இந்து சுபன் ” ( ஜாதக அலங்காரம் )
” தேளிர் பிறந்தார்க்கு சேய்புகர் மான் மைபாவி
நாளும் பொன்னி ரவி நல்லாவரா – நீளிரவி
சந்திரனுங்கூடியிடிற்றரசர் யோகமுண்டாஞ்
சொந்த குரு கரி கொல்லாம் சொல் ”
மேற்கூறிய கவிகளின்படி இந்த விருச்சிக லக்கினத்திற்கு ‘ இரு சுடர்கள் ‘ அதாவது
சூரியனும், சந்திரனும், குபேரனென்ற சொல்லப்படும் குருவும் யோகாதிபதிகள் ஆவார்.
இவர்கள் ஒருவருக்கொருவர் எங்கு இணைந்திருப்பினும் யோகத்தை தரக் கூடியவர்கள்.
லக்கினாதிபதியான செவ்வாய் 6க்குடைய ஆதிபத்தியமும் பெற்றதனால் அசுபராகிறார். 8,
11க்குடைய புதன் மாரகராகிறார். 7, 12 க்குடைய சுக்கிரனும் மாரகஸ்தானத்தை வகிப்பதால்,
புதன், சக்கிரன் எங்கிருப்பினும் அவர்களின் தசாபுத்தி காலங்களில் கண்டம், மாரகம்,
கணவன் அல்லது மனைவி பிரிவினை, தொழில் பாதிப்பு போன்றவைகளைத் தருகிறார்கள்.
இவர்களோடு செவ்வாய், ராகு, கேது சேர்க்கை பெறின் பாதிப்புகள் உறுதியாக
நடைபெறுமென கூறலாம்.