7. ஏழாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் பொறுமையுடைவன். எப்போதும் காமீ,
அதிக தீவிர கோபிஷ்டன். சிவந்த சரீரமுடையவன், கெட்டவர்களைக் கொண்டாடி
பூஜிப்பவன், கெட்ட புத்தியடையவன்.
8. எட்டாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் ரோகத்தால் சபிக்கப்பட்ட அங்கங்களுடையவன், அரசன் பந்து வேலையாட்கள் புத்திரன் இவர்களால்
பீடிக்கப்பட்டவன் துக்கமுடையவன்.
9. ஒன்பதாமிடத்தில பிராணபதன் இருந்தால் ஜாதகன் புத்திரருடையவன், தனம்
நிறைந்தவன், புகழுடையவன். இஷ்டமாய்ப் பார்க்கத் தகுந்தவன். எப்போதும்,
அதிர்ஷ்டமுடையவன், நல்ல ஆழ்ந்த யோசனையுடையவன்.
10. பத்தாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் வீரியமுடையவன், அறிவாளி,
சமர்த்தன், ராஜ காரியங்களை நன்கறிந்து செய்பவன்,
தேவார்ச்சனை முதலியவை செய்பவன்.
11. பதினொராமிடத்தில பிராணபதன் இருந்தால் ஜாதகன் கொண்டாடப்பட்ட
குணமுடையவன் நல்ல அறிவுடையவன், போகி, தனத்துடன் கூடியவன்,
வெளுப்பு நிறமடையவன், கொண்டாடும் புருஷனாவன்.
12. பன்னிரண்டாமிடத்தில் பிராணபதன் இருந்தால்
ஜாதகன் அல்பன், துஷ்டன், அங்கக்குறையுடையவன், பந்து, பிராமணர் இவர்களிடம்
துவேஷடையவன், நேத்திர ரோகமுடையவன், அல்லது ஒற்றைக்கண்ணணாவான்.