1. ஜென்ம லக்கினத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் ஊமையாவன்,
பயித்தியம் பிடித்துவிடும். ஜடனாவன், அங்கவீனனாவன். துக்கமுடையவன் கிரசன்
அதாவது மெலிந்தவனாவன். குறைவுடையவன், ரோகியாவன்.
2. ஜென்மலக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் பிராணபதன் இருந்தால் வெகு தனம்,
வெகு தான்னியம், வெகு வேலையாட்கள், வெகு குழந்தைகள், நற்பெயர்
இவற்றையுடையவன் ஆவான்.
3. மூன்றாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் கொலை செய்வோன் காதகன்,
கர்வத்துடன் கூடியவன், நிஷ்டூரமுடையவன், அதிக திருடன் ( பிராம்மணனாயின்
யாகாதிகர்மங்களை விட்டொழிந்தவன் ), குரு பக்தியில்லாதவன்.
4. நான்காமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் சுகி,தானே யஜமானன்,
நல்லவர்களுக்கு நல்ல சிரேஷ்டன், பிரசவத்தில் சமர்த்தன், மேன்மையான சத்தியவான்,
பூஜிக்கத்தகுந்தவன், வேதத்தையறிவன், நல்ல ஒழுக்கமுடையவன்.
5. ஐந்தாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் சுகமுடையவன், வேலையுடன்
கூடியவன், அபசார எண்ணம் உடையவன். தயையுடையவன்,
எல்லா இச்சைகளுமுடையவன்.
6. ஆறாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் பந்து, சத்துரு, இவர்களுக்கு வெகு
தீக்ஷண்ணியமுடையவன், தயையில்லாதவன், கர்விஷ்டன், அக்னி மந்தமுடையவன்,
அற்பரோகமடையவன், தனமுடையவன், அற்பாயுளுடையவன்.