1. ஜென்ம லக்கினத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் எப்போதும் ரோகபீடையுடையவன், காமீ,
பாபாத்மா மூடனில் அதிக கிரமமூடன், நிதானமுடையவன். கெட்ட பாவங்களுடையவன். அதிக துக்கமுடையவன்.
2. ஜன்மலக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் இயற்கைக்கு மாறுபாடானவன்,
துக்கமுடையவன், விசனமுடையவன், அடக்கமில்லாதவன், தனமில்லாதவன்.
3. மூன்றாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் அழகான அங்கங்கள் உடையவன். சுகமுடையவன்,
புண்ணியமுடையவன், சரிஜனங்களுடன் கூடியவன், நல்லோரிடம் அதிக அன்புடையவன்,
ராஜ பூஜையடைவான்.
4. நான்காமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் ரோகியாவன், சுகமில்லாதவன்,
எப்போதும் பாபத்தையே செய்பவன், வாதபித்தாதிக்கியமுடையவன்.
5. ஐந்தாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் புகழில்லாதவன். தனமில்லாதவன். அற்பாயுளுடையவன்,
துவேஷமுடையவன். இருதயதெளர்ப்பல்லியமுடையவன், நபும்ஸகனாவன், நாஸ்திகன், ஸ்திரீ ஜிதஸ்ஆவான்.
6. ஆறாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் சத்துருக்களை அழிப்பவன். நல்ல புஷ்டியுள்ள அங்கங்களுடையவன். நல்ல தேஜஸ்யுடையவன், ஸ்திரீகளுக்குச் சம்மதியுடையவன். உற்சாகமும் நல்லதிடமும், இஷ்டமுடையவன்.