நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம். பூங்காவுக்கு அருகிலேயே, சிவ ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ”பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்” என்பாள். உடனே எடக்கு மடக்கு, ”அந்த சிவனுக்கு பவரே கிடையாது. பவர் இருந்தால், தன் கோயிலைப் பாழடைய விட்டிருப்பாரா?” என்று மடக்குவார். ஒருநாள் காலையில்… வழக்கமாக பெரிய டம்ளரில் காபி எடுத்து வரும் மனைவி, மிகச் சிறிய டம்ளரைக் கொண்டு வந்தாள். ”ஏன்… ஸ்பூன்ல கொண்டு வரது தானே?!” என்று எரிச்சலானார் எடக்கு. ”இது காபி இல்லை; நல்லெண்ணெய். வாய்ல புண்ணுன்னு சொன்னீங்களே… அதான்! நல்லெண்ணெயை அரை மணி நேரம் வாயிலே வெச்சிருந்து, பிறகு கொப் பளிச்சா, வாய் புண் குணமாகும்னு பத்திரிகையில படிச்சேன். நீங்க வாக்கிங் போகும் போது வாயில நல்லெண்ணெயை ஊத்திக்குங்க. வீட்டுக்கு வந்ததும் கொப்பளிச்சிடுங்க” என்று புரோகிராம் போட்டுக் கொடுத்தாள் மனைவி. ஆனால், சோதனையாக, எடக்கு வாயில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு தெருவில் இறங்கிய ஐந்தாவது நிமிஷம், அவருடைய ஆபீசர் எதிரே வந்தார். ”அடடே! உன் வீட்டுக்குத்தான் வர்றேன்!” என்று ஸ்கூட்டரை நிறுத்தினார். வேறு வழியில்லாமல், எண்ணெயைத் துப்பிவிட்டு அவரிடம் பேசினார் எடக்கு. வீட்டுக்குப் போனதும், நடந்ததை மனைவியிடம் சொன்னார். Category: பல்சுவை கதம்பம்By admin@powerathmaMay 22, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஆபீசர்எடக்குகாபிகுணமாகும்நல்லெண்ணெய்புரோகிராம்பூங்காமனைவிவாக்கிங்விளக்கு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கர்மா செயல்படும் விதம் 4NextNext post:ஒரு எடக்கு மடக்கு கதை 2Related Postsவாழ்க்கை சுவையானது.November 30, 2024அதிசய காந்த கண்ணாடிAugust 10, 2024இரும்புக் குதிரைகள்August 9, 2024காந்தளூர் சாலை போர் 4August 8, 2024காந்தளூர் சாலை போர் 3August 7, 2024காந்தளூர் சாலை போர் 2August 6, 2024