பெண்கள் மெல்லிய உடலமைப்பும் கட்டான உறுப்புகளும் பெற்றிருந்ததால் அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுகிறார்கள். கவனமின்மையின் காரணமாக பெண்கள் தங்கள் உடலை தடிக்கச் செய்து பார்க்க அசிங்கமாக இருக்கிறார்கள். செய்முறை – பர்வதாசனத்தில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு மேலாக நன்றாக வளைவு இல்லாமல் நீட்டி இரு கைகளின் விரல்களையும் பின்னிக்கொண்டோ அல்லது ஒன்றின் மீது மற்றொன்று இறுக்கமாகச் சேர்ந்து இருக்கும்படியோ வைக்கவும். விரல்களை மடக்காமல் நீட்டிவிடவும். இரண்டு தோள்களையும் காதுகளுக்கு மிக அருகில் இருக்கும்படி செய்து தலையை நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது சுவாசத்தை உள்ளிழுக்கவும். சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உடல் பாகத்தை முடிந்தளவுக்கு மேலே உயர்த்தவும். உயர்த்தும் போது இரண்டு முழங்காலும் வளையாமல் இருக்க வேண்டும். உள்ளிழுத்த சுவாசம் எவ்வளவு நேரம் நிறுத்தப்படுகிறதோ அந்த அளவு வரை கைகளை உச்சநிலைக்கு உயர்த்துவது நல்ல பலனை அளிக்கும். 3 வினாடி வரை இந்நிலையில் இருந்து பின்னர் சுவாசத்தை வெளிவிட்டுக் கொண்டே ஆசனத்தைக் கலைக்கலாம். இந்த மாதிரி 2 அல்லது 3 முறை செய்யலாம். பலன்கள் — கர்ப்பாசயமு அடிவயிற்றிலுள்ள எல்லாத் தசைகளும், நரம்புகளும் நன்கு இழுக்கப்பட்டு இடுப்புப் பகுதி தசைகளைத் தளர்த்துகிறது. முதுகுத் தசைகளை நேராக நிமிர்த்தி விலா, இடுப்புப் பக்கமுள்ள தசைகளை நன்கு இயங்கச் செய்கிறது. அடிவயிறு தொப்பை விழாமல் தடுக்கிறது. தொப்பை (அளவுக்கு மீறிய சதை) இருந்தாலும் அவற்றைக் கரையச் செய்கிறது. சதைகளை நன்கு இயங்கச் செய்கிறது. முதுகு கூனலிருந்தால் நேராக்க உதவுகிறது. எலும்புக்கூடு சீராக அமைகிறது. கர்ப்பாசயத்தில் பாதிக்கப்பட்ட உறுப்புகளைச் சீர்செய்து வலுவு கொடுக்கிறது. இந்த ஆசனத்தை காலை, மாலை ஒரு நிமிடத்திற்குக் குறையாமல் செய்தல் வேண்டும். Category: யோகாBy admin@powerathmaMay 3, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகர்ப்பாசயம்பர்வதாசனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 13NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 27Related Postsசுந்தர யோக சிகிச்சை முறை 128November 25, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 127November 24, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 126November 23, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 125November 22, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 124November 21, 2024சுந்தர யோக சிகிச்சை முறை 123September 30, 2024