பிறவிக் கடலாகிய இதை எப்படி நான் கடப்பேன்? எனக்குச் செல்லும் வழி எது? நான் கைக்கொள்ள வேண்டிய உபாயம் எத்தகையதாகும்? இதை ஒரு சிறிதும் நான் அறிய மாட்டேன். பிரபுவே கருணையால் காத்தருளும். பிறவித் துன்பத்தை ஒழிக்கும் வழியில் என்னைக்கூட்டி வைத்தருளும். இவ்வாறு பேசுபவனும் தம்மைச் சரணடைந்தவனும் காட்டுத்தீ போன்ற பிறவித் துன்பத்தால் பொசுக்கப்பட்டவனுமாகிய அவனைக் கருணாரஸத்தின் கசிவுடன் கூடிய பார்வையால் உற்று நோக்கி விரைவில் பயமின்மையை அளிக்கிறார் மஹாத்மாவாகிய குரு. பாதுகாப்பை விரும்புபவனும் மோக்ஷத்தில் நாட்டமுள்ளவனும் நல்ல முறையில் சொன்னதைச் செய்பவனும் அடங்கிய மனமுடையவனும் சமம் முதலிய நியமங்களை உடையவனுமாகிய அச்சீடனக்குக் குருவானவர் கருணையால் தத்துவோபதேசத்தைச் செய்யப் புகுவார். Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaApril 26, 2021Leave a commentTags: DIVINEPOWERAATHMAA.COMஉபாயம்கருணைகாட்டுத்தீபிறவித் துன்பம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பகவத்கீதை தத்துவம் 2NextNext post:தெய்வ வழிபாடு என்பது யாது?Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023