“உத்தவர்
கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச் செய்யவில்லை?
விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,
வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன்செல்வத்தை இழந்தான், நாட்டை இழந்தான்;
தன்னையும் இழந்தான்.சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்நுழைந்து தடுத்திருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.’திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை அவளைப்
பணயம் வைத்து ஆடு.இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் – துரியோதனன்.அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,அந்த பொய்யான
பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாகவிழும்படி செய்திருக்கலாம்.அதையும் நீ
செய்யவில்லை.மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும்
நிலை ஏற்பட்ட போது தான் சென்று, ‘துகில் தந்தேன்,
திரௌபதி மானம் காத்தேன்’ ஆடை தந்தேன், என்று மார்தட்டிக் கொண்டாய்.
ஆபத்தான இது போன்ற சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத, நீ எப்படி ஆபத்பாந்தவன் ?
பகவான் சிரித்தார்.
“உத்தவரே !
விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி.
துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை.
அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது
அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
“துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும்,
ஏராளமான ஆஸ்தியும் இருந்தது.‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை
உருட்டிச்சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம்.தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என்
சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்’ என்று
சொல்லியிருக்கலாமேசகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான்
முடியுமா?அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போடமுடியாதா ?
போகட்டும்.தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான்.
என்பதையாவது மன்னித்து விடலாம்.ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு
மாபெரும் தவறையும் செய்தான்.
‘