இந்திர தனுசுவின் துவாதர பாவபலன்.
7. ஏழாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் கடவுள் போன்ற சம்பூர்ண
குணமுடைய பிரபு, சாஸ்திரமறிவார், கார்மிகர், பிரியர்.
8. எட்டாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் பிறர் காரியங்களுடையவர்,
குரூரர், பரதாரகமனமே பிரதானமானவர், சமீப மரணமுடையவர்,
சீக்கிரத்தில் மரிப்பார்.
9. ஒன்பதாமிடத்தில் இந்திர தனுசு இருந்தால் ஜாதகன் தபம் செய்வார், நிலையாக
விரதத்தை அநுஷ்டிப்பவர், வித்தை அதிகமாயுடையவர் கொண்டாடப்பட்ட
ஞானமுடையவர், ஜகம் முழுவதும் ( உலகம் ) கொண்டாடப்படுவர்.
10. பத்தாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் ஜகம் முழுவதும்
கொண்டாடப்பட்ட புருஷனாவார்.
11. பதினொராமிடத்தில் இந்திர தனுசு இருந்தால் ஜாதகர் சுபத்துடன் கூடியிருப்பார்.
ரோகமின்றி திடமான சரீரசுகமுடையவர், கோகபாக்கினியுடையவர்,
மித்திரன் ஸ்திரீ, உடையவர் பரமாஸ்திரங்களும் அறிவார்.
12. பன்னிரண்டாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் கர்வமும் கெட்ட கோபமும்
உடையவர், அதிகமானி, துர்ப்புத்தியுடையவர், வெட்கமில்லாதவர், பரஸ்திரீ கமனம்
செய்பவர், எப்போதும் தனமில்லாதவர்.