7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தனம், மனைவி, புத்திரன் இவர்களால் விடுபட்டவன் அதாவது இல்லாதவன், ஸ்திரீ ஜிதன், காமீ, வெட்கங்கெட்டவன், பிறருடைய சிநேகமுடையவன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் வக்கிரப் பார்வையுடையவன், அழகில்லாதவன், அபகீர்த்தியுடையவன், பிராம்ணநிந்தையுடையவன், ரக்தபீடை யடையவன், விசனமுடையவன். 9. ஜென்ம லக்கினத்திறகு ஒன்பாதாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அனேக வியாபாரமுடையவன், எப்போதும் அனேக மித்திரருடையவன், வெகு வேத சுருதிகளை அறிபவன், ஸ்திரிகளுக்கு இஷ்டமானதைச் சொல்லவறிந்தவன், பிரயமாகவும் பேசுபவன். 10. ஜென்ம லக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் விதீபாதனிருந்தால் சம்பத்துடையவன், தர்மம் செய்பவன், சாந்தமுடையவன், தர்ம காரியங்களில் அறிவுடையவன், ரொம்ப விசேஷ அறிவுடையவன், வெகுமேதாவி ஞானி, சமர்த்தன். 11. ஜென்ம லக்கினத்திற்குப் பதினொராமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் வெகு மேன்பாடான தனமுடையவன், மானி, சத்தியவாதி, திடமான விரதமுடையவன், குதிரை முதலியவைகளுடையவன், அவற்றுடன் நெருங்கிப் பழகுபவன். 12. ஜென்ம லக்கினத்திற்குப் பன்னிரண்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் கோபீ, வெகு வேலைகளடையவன், விரையமுடையவன், தர்மத்தைத் தூஷிப்பவன், தன் உறவினர்களுடன் துவேஷமுடையவன். Category: ஜோதிடம்By admin@powerathmaApril 10, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகோபீசத்தியவாதிசமர்த்தன்ஜாதகன்ஞானிமானிமேதாவிவேத சுருதிஸ்திரி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். விதீபாதனுடைய துவாதச பாவபலன். 1NextNext post:பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். பரிவேடனுடைய துவாதச பாவபலன்.1Related Postsவியாழன் 15November 10, 2024வியாழன் 14November 9, 2024வியாழன் 13November 8, 2024வியாழன் 12November 7, 2024வியாழன் 11November 6, 2024வியாழன் 10June 25, 2024