சீடன் — ‘ஆண்டவனே, உமக்கு நமஸ்காரம். வணங்கும் ஜனங்களுக்கு உண்மையான உறவினரே, கருணைக் கடலே, பிறவிக்கடலில் வீழ்ந்துள்ள என்னைக் களங்கமற்றதும் அமுதத்தைப் பொழிவதுமான உம்முடைய கடைக்கண் பார்வையால் கரையேற்றிவிடும். தடுக்க முடியாத பிறவித் துன்பமாகிய காட்டுத் தீயால் பொசுக்கப்பட்டவனும், துரதிருஷ்டமாகிய காற்றால் அலைக்கப்பட்டவனும், அதனால் பயந்தவனும் தங்களைச் சரணடைந்தவனுமாகிய அடியேனை – வேறு புகலிடம் நான் அறியேனாதலால் – சாவினின்று காத்தருள்வீராக. குரு — மனவமைதியுள்ளவர்களும் வஸந்த காலத்தைப் போல் உலகிற்கு நன்மையைச் செய்பவர்களும் பயங்கரமான பிறவிக் கடலைத் தாங்கள் தாண்டியவர்களாய்ப் பிற மனிதர்களையும் காரணம் வேண்டாமல் தாண்டுவிப்பவர்களுமான ஸாதுக்கள் உலகில் வசிக்கிறார்கள். சீடன் — பிரபுவே, பிரம்மானந்த ரஸத்தையனுபவித்துப் பரிசுத்தமானதும் மிகக் குளிர்ச்சியானதும் தங்களுடைய வாயாகிற கலசத்திலிருந்து பெருகுவதும் கேட்பதற்கினியதுமாகிய பேச்செனம் அமுதத்தால் பிறவித்துன்பமாகிற காட்டுத்தீயின் சுவாலைகளால் பொசுக்கப்பட்ட இவனைக் குளிப்பாட்டுங்கள். Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaApril 8, 2021Leave a commentTags: கருணைக் கடல்பிறவிக்கடல்ஸாதுக்கள் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 6NextNext post:பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். விதீபாதனுடைய துவாதச பாவபலன். 1Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023