பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது.
இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு
மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த
பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம்
இவற்றின் பிரதிபலிப்புகள் ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது.
அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமுமொன்றே அறிந்து தான் பார்க்கும் போதே
என்று சித்தர் பாடுகிறார்.
பொதுவாக எலும்புக்கூடு, நரம்பு, தசை, தமனி, முதலானவைகள் தான் மனிதன் என்று
சொல்வது அறியாமை என்கின்றனர் சித்தர்கள். அண்டத்தில் அதாவது பிரபஞ்சத்தில்
உள்ளது அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்கிறார்.
பிண்டம் என்றால் உடம்பைக் குறிக்கும்.