Skip to content
உள்ளே ஒன்று வைத்து புழுங்கி வெளியே வேறு முகம் காட்டுகிறவர்களுக்கு
ஒரு நாள் தன் உண்மை முகம் தனக்கே தெரியாமல் போகலாம்,
தெரிய ஆசை வந்து தேடுகையில் உண்மை முகம் உள்ளே இருந்து தெரியாது,
அழிந்து போயிருக்கலாம்,
பொய் முகம் அணிந்து, அணிந்து
பொய்யே உண்மையாகவும் காட்சி தரலாம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்
நம் முகத்தை நாம் மறைத்து வேறு முகத்தை காண்பித்திருப்போம்,
அப்படி நாம் மறைத்து வேறு முகத்தை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்திருப்போம்.
எந்த விஷயத்திற்க்கு வேண்டி, எந்த நபரிடம் நாம் நம் முகத்தை மறைத்தோம் என்பது
வெளியில் தெரியாத ரகசியமாய் இருக்கும் வரை சந்தோஷமே,
இல்லாவிடில் பல சமயங்களில் அது ஆயுள் வரை துக்கமே.
Go to Top