சிவராத்ரி ஒரு விளக்கம்:
மாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் மகாசிவராத்ரி விரதம் அனுஷ்டித்தல் வேண்டும்.
த்ரயோதசி எனப்படும் பதின்மூன்றாம் சக்தியும், சதுர்த்தசி எனும்
பதிநான்காம் நாள் சிவமும் ஆகும்.
நடுநிசியில் சதுர்தசியும், அதற்கு முன்னம் த்ரயோதசியும் இருப்பது உத்தமம்.
குறைந்த நேரம் த்ரயோதசியும், அதிக நேரம் சதுர்தசி அல்லது
அதிக கால அளவு த்ரயோதசியும்,
குறைந்த கால அளவு சதுர்தசியும் அல்லது சூரிய உதயத்தில் த்ரயோதசி இருந்து
பின்னர் நாள் முழுவதும் சதுர்தசி இருந்தாலும் அது சிவராத்ரியாகும்.
அமாவாசை திதி சிறிதளவு கூட இருக்கலாகாது. அது அதிக தோஷம் தரும்.
த்ரயோதசி, சதுர்தசி, அமாவாசை மூன்றும் கூடும் நாளில் திருவோணம் நட்சத்திரம்
கூடினால் அது அதம சிவராத்ரி ஆகும்.
இதை அனுஷ்டிப்பது பாபமாகும்.
இதற்கு ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும் என குமார தந்திரம் கூறுகிறது.
இதன்பிரமாணம் பின்வருமாறு:
‘தன்மாஸே க்ருஷ்ணப«க்ஷது வித்யதெயா சதர்தசீ
தத்ராத்ரி சிவராத்ரிஸ்யாது சர்வபுண்ய சுபாவஹ:
ராத்ரௌ யாமத்வா தர்வாக்கடிகைகா மகாநிதி
தஸ்யாம் சதுர்தசீ யஸ்மாத் தத்ராத்ரம் சிவராத்ரகம்
முக்யாத்ரயோதசீ மிஸ்ரா பர்வமிஸ்ராதமாகமா
மத்யம் சிவராத்ரிஸ்யாத் அஹோராத்ரஞ்ச சதுர்த்தசீ
தஸ்யாம் பூஜ்யோ மஹாதேவ:
சைவமும் ஆகமங்களும்:
தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களுமே ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்டு,
ஆகமவிதிகளின்படி நித்ய
நைமித்திக காம்ய கர்மாக்களும் உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன.
சைவசமயம் எனும் சரீரத்திற்கு ஜீவனாக விளங்குவது சிவ ஆகமங்களே ஆகும்.
எனவே சைவசமயத்தவர் தத்தம் ஆகமங்களின்படியே நித்ய
நைமித்யகர்மங்களும், விரதங்களும்
அனுஷ்டிப்பதே மரபு. அதைவிடுத்து ஸ்மிருதிகள் வழியில் அனுஷ்டிப்பது தவறாகும்.
சைவ ஆகமங்கள் அனைத்துமே சௌரமானத்தையே அனுஷ்டிக்க வேண்டும்
என வலியுறுத்துகின்றன.
சாந்த்ரமானம் கூடாதெனவும் தெளிவாக்குகின்றன. இதனை,
‘சௌரமானே வ்ரதமம் குர்யாத்சாந்த்ரமானனே நகாரயேத்’
எனவும் சிந்தயம் எனும் ஆகமம் சௌரமானத்தில் அனுஷ்டிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
மேலும் உத்திரகாரணாகமம்.
“மாகல்குணய:க்ருஷ்ண சதுர்தஸ்யாம் சுபதிதௌ
சௌரமாஸே வ்ரதம் குர்யாத் சாந்தரமானே நாகாரயேத்
என சௌரமாஸேத்திவ் தான் விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக்குகிறது. தவிர
“துலாஸ்நான முஷாப்யங்கம் க்ருத்திகாதி பவமேவ
தனுர்மாசி ஹரெ:பூஜா சிவராத்ரி வ்ரதம் ததா
சௌரமானேன கர்த்தவ்யம் சாந்த்ரமானே ந கராயேம்”
எனும் பிராமணமும் சௌரமானப்படியே சாந்த்ராதிமானிகள் மாக
பகுளத்தில்-தைமாதத்தில் விரதம்
அனுஷ்டிக்கலாம். ஆனால் தமிழர்கள் சௌரமானிகள் ஆனதாலும்,
சிவாகமங்கள் யாவுமே சௌரமானத்தையே
வலியுறுத்துவதாலும், க்ஷயாதி மாஸம் வரும் ஆண்டுகளிலும்,
மாசி மாதத்தில் சிவராத்ரி விரதத்தை
அனுஷ்டிப்பது தான் நியாயம்.
மேலாக காமிகம் எனும் ஆகமத்தில், மகரத்தில் சூரியன் வரும்போது
தை மாதத்தில் மாகஸ்நானம் செய்யவும்.
மாகஸ்நான விரத முடிவில் சிவராத்ரியை அனுஷ்டிக்க கூறப்பட்டுள்ளது.
இதிலும் விசேஷம் யாதெனின் மகரரவியாகிய தை மாதத்தில்
சாந்தரமானமாக(மாசி) முடிவடைந்துவிடும்.
மறுபடி 30 நாள் மாகஸ்நானம் செய்யவும்.
அப்படிச் செய்தபின் கடைசியில் க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியில் சாந்தரமான புஷ்யமாக
அதாவது தை மாதம் போல் தையில் வரும் சாந்தரமான மாக மாச
கிருஷ்ண சதுர்த்தசியை நீக்கி
மாசியில் வரும் கிருஷ்ண சதுர்த்தசியில் மகாசிவராத்ரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
மகாசிவராத்ரி விரதம் பற்றிய காலக்கணக்கீட்டினை சிந்தியம் எனும்
ஆகம நூல் பின்வருமாறு தெளிவாக்குகிறது.
“சிம்ஹேது ரவி சம்ப்ராப்தெ ரோகிணிசஹிதாஷ்டமி
ததாதிகணனம் க்ருத்வா காசீதிசரத்ரா
சதோபேத தினாந்தேது சிவராத்ரி இதி நிஸ்ச்சய:
சிம்ம ராசியில் சூரியன் நிற்கும் ஆவணி மாதத்தில் ரோகிணியோடு கூடிய அஷ்டமி தினம்
முதல் எண்ணி வரும்
184வது நாளின் இறுதியில் சிவராத்ரி காலமாகும்.
எந்த வருஷத்திற்கும் இக்கணக்கீடு பொருந்தும். இதில் விசேஷ விதியாது எனில்
184-ம் நாள் சதுர்தசி இல்லாவிடினும் அல்லது பங்குனிக்குச் சென்றாலும் மாசியில்
சதுர்தசியில் வ்ரதம்அனுஷ்டிப்பது தான் சரி.
24-09-1920-ம் ஆண்டு காஞ்சி பரமாச்சார்யாள் முன்னிலையில் நடைபெற்ற
சாஸ்திரசதஸில் விருதை சிவஞான
யோகியின் கருத்துகளை அதாவது மாசியில்தான் சிவராத்ரி வ்ரதம்
அனுஷ்டிக்க வேண்டும் என்பதினை
சிவாகம பண்டிதர்கள் முன்னிலையில் ஆசார்ய சுவாமிகளும் ஆதரித்தார்கள்.
இதே கருத்தினை ஆகமங்களும் அங்கீகரிக்கின்றன.
“மாக பால்குணயோர் மத்யெ க்ருஷ்ணப«க்ஷ சதுர்த்தசீ
சிவராதரி திக்யாதஸ் ஸர்வக்ஞாநொ உத்தமோத்தமம்”
–காரணாகமம்
“மாக பால்கணய க்ருஷ்ண சதுர்தஸ்யாம் சுபதினே
சௌராமாஸே வ்ரதம் குர்யாத் சாந்த்ரமாநேன ந காரயேத்”
–உத்கரகாரணகமம் & சுப்ரபேதம்
“கும்பம்கதே திவாநாதே க்ருஷ்ணேயாது சதுர்த்தஸி
மாகமாஸ்ய சிதெப«க்ஷ வித்யதெயா சதுர்த்தசீ தத்ராத்ரி சிவராத்ரி”
–காமிகாகமம்
ஆகம ப்ராமணங்கள் அனைத்துமே சௌரமான மாசி மாதத்தில் தான் அனுஷ்டிக்க வேண்டும்
எனத் தெளிவாகக் கூறுகின்றன.
இதைவிடுத்து சாந்திரமானத்தில் அனுஷ்டிப்பதால் ஆயுள், குடும்பம்,
செல்வம் இவை நாசமாகும் என்பதினை,
ஸர்வேஷாம் சௌரமாநகம் பராத்தேசாலய
யேஷ்வேஷ§ சௌரமானே நாகரயேத்
சௌரமான விஹாயாத சாந்திராதிபி: க்ருதீதத்யதி
ஆயு:ஸ்ரீபுத்ராஞ்ச தத்கர்மம் நிஷ்பலம் பவேத்.