Skip to content
அரசர் காலத்தில் புறாக்கள் தூது போயின. எனவே காலம் காலமாக
மனிதனோடு புறாக்கள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. புறாக்களில்
மிகவும் விலை உயர்ந்தது பந்தயப் புறாதான். இதனை ஐதாராபாதில்
கொண்டு போய் விட்டாலும் சரி, காஷ்மீரை தாண்டி விட்டாலும் சரி, ஒரு
சின்ன ரவுண்டு அடித்துவிட்டு புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்த
வகைதான் பந்தய புறாக்கள் என்கிறார்கள். இவை பெல்ஜியம், ஜெர்மனி
போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. நீண்ட தூரம்
பறக்க கூடிய அந்த நாட்டு புறாக்களின் முட்டைகள் இங்கு கொண்டு வந்து
குஞ்சு பொரிக்க வைக்கிறார்கள். இந்த வகை ஜோடி புறாக்களின் விலை
ரூ 25,000 முதல் ரூ 1 லட்சம் வரை உள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்க
முடியாதவர்கள் வெளிநாட்டு புறாக்களுடன் கலப்பின புறாவை உருவாக்கி
வருகிறார்கள். இது கொஞ்சம் விலை குறைவு. நீண்ட தூரம் நிற்காமல் பறக்கும்.
இதற்கடுத்து பேன்சி புறா என்று இருக்கிறது. இதை அடுத்த தெருவில் விட்டால்
கூட நம் வீட்டிற்கு பறந்து வர தெரியாதவை. வீடு, ஹால், தோட்டம், இவற்றைத்
தாண்டி எங்கேயும் போகாது. வசதி படைத்தவர்கள் தங்கள் வீட்டில் பறவை
வளர்க்க நினைப்பவர்கள் இந்த வகை புறாக்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
காட்டுப்புறா என்றொரு வகை உண்டு. இது யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர பறவை.
காட்டில் அலைந்து திரிந்து இரை தேடும். பொழுது சாய்ந்தால் கோவில் மாடங்கள்
கட்டிடங்களில் தங்கிக் கொள்ளும். இவற்றை சாதாரணமாக பார்க்க முடியாது.
அடர்ந்த காடுகளில் தான் தெரியும். இதற்கு ஏகப்பட்ட மவுசு உண்டு.
ஒரு ஜோடி ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போகிறது.
Go to Top