Skip to content
கூர்மாசனம்
You are here:
- Home
- யோகா
- கூர்மாசனம்
படத்திலுள்ளபடி
குய்யபாத ஆசன நிலையிலுள்ளபடியே இரண்டு கைகளை மட்டும்
சிரசிற்குமேல் கும்பிடுவது போல அமைத்து
மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் சாதாரணமாக இழுத்தும் விட்டும்
ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை அப்படியே இருத்தல் வேண்டும்
இம்மாதிரி 3 முதல் 5 முறை வரை செய்யவேண்டும்.
குறிப்பு –
கூர்மம், ஆமை, தன் ஐந்து உறுப்புக்களையும் ( தலை, நான்கு கால் ) தன் விருப்பப்படி
வெளியில் நீட்டவும், அடக்கவும் செய்யும்.
அதுபோல இந்த ஆசனத்தைச் செய்பவர்களும் ஐம்புலன்களை
அடக்கும் ஆற்றல் உண்டாகும்.
பலன்கள் —
மனதை அடக்கும் ஆற்றல் உண்டாகும்.
மனம் ஒரு வழிப்படும். ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் உண்டாகும்.
குய்யபாத ஆசனத்தில் பலன்கள் முழுவதும் இவ்வாசனத்திற்கும் உண்டு.
கர்ப்பத் தடைக்கு இந்த இரண்டு ஆசனங்களையும் செய்ய வேண்டும்.
Go to Top