Skip to content
உயர்ந்தோங்கிய மலைகள் அடி வானத்தை தொட்டு விடுமோ என்கிற நிலையில்
அடர்ந்த கானகங்கள்
பரந்து விரிந்து இருக்கும் கடல் இவைகளை நாம் இயற்கையென்று அழைக்கிறோம்.
அதன் நிலைகளை கண்டு மனம் மயங்குகிறோம் நம்மையே மறக்கின்றோம்.
இவைகள் உருவான விதம் அல்லது உருவாக்கிய சக்தி எது என்ற பிரம்மிப்போடு
சிந்திக்கிறோம். நம் முன்னோர்கள் சிந்தித்து அந்த சக்திக்கு
இறைவன் என பெயரிட்டு நமக்கு தந்தனர். அதாவது
இயற்கை – இறைவன்
அவர்கள் மிக எளிதாக நமக்கு உணரும் வண்ணம் சொல்லி சென்றுவிட்டார்கள்.
நமக்கு ஏனோ அது சரியாய் புரியவில்லை. நாம் வாழ இயற்கை
மிக உறுதுணையாய் இருக்கிறது என்பதே நமக்கு புரியவில்லை.
மரம், செடி, கொடிகள் இவைகளின் பங்களிப்பாய் காற்று தூய்மை அடைகிறது.
மனிதன் தற்போதுசெய்து கொண்டிருக்கும் செயலினால் காற்று
எத்தனை மாசு அடைகிறது. ஆனால் அந்த மாசை பெரும் காடுகளும்
இயற்கை அரணாய் உள்ள மரம், செடி,கொடிகளும் அல்லவா சுத்தம் செய்கிறது.
அதை மனிதன் உணர்ந்தால் இயற்கை நம்மை காக்கும் இறைவன் என்று உணர்ந்திருப்பான்
ஏனோ இன்னும் அவன் உணரவில்லை காரணம்
வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழிப்பது
வளர்ச்சி என்ற பெயரில் பூமிக்குள் துளையிடுதல், வானத்தில் குப்பையிடுதல்,
சமுத்திரத்திற்கு அடியில் போக்குவரத்து உண்டாக்குதல் என்ற செயல்களினால்
இயற்கையின் இருப்பு மாறுகிறது. அதன் இருப்பு மாறும் போது
மனிதனின் இருப்பும் மாறுகிறது.
அந்த மாறுதல் இயற்கையை அழிப்பதில் தொடங்கி மனிதனை அழிப்பதில் முடிகிறது.
ஏனென்றால் இயற்கையும் மனிதனும் வேறு, வேறு அல்ல இரண்டும் ஒன்றே
மனிதன் அறியாமையால் தான் வேறு இயற்கை வேறு என்று சிந்தித்து குழப்பம் அடைந்து
செயல்பட்டு தன்னையே அழித்துக் கொள்ளும் செயலில்
தன்னையறியாமல் ஈடுபட்டு அதற்கு வளர்ச்சி என்று மன மயக்கமும் கொள்கிறான்.
அறிவியல் வளரும் தோறும் ஒவ்வொன்றையும் அறிவு பூர்வமாக மட்டுமே
காண முயற்சிப்பதால்
மனிதன் பரந்த மனப்பான்மை
இல்லாதவனாகி வருவதை காண்கிறோம்.
Go to Top