“கடக லக்கினத்தோர்க்கமைச்சன் சேய்சுபராங்காரகன் யோககாரகனா
முடனிருந்திடினும் பிரபல யோக முற்றவனி ரவியோ கொல்லான்
றிடமுள பளிங்கு மாலிவர சுபர் செப்பிய விவரொடுங்கொடிய
முடவன் மாரகனாமாரகத்தான் முற்றிடிற் கண்டடமு மொழியே”
( யவன காவியம் )
“சுங்கனிந்து மைந்தனிவர் சூழாக்கொடுக்கோட்கள்
மங்கலன்மா வேந்தனிவர் மன்னுகின்ற-துங்கமுள்ள
நல்லோர் கணல்லயோகக் கிறைவனாகுமவன்
சொல்லுறிற்பூ சிதனமாய் சொலல்
( தாண்டவ மாலை )
“நூதலுங்கடகம் புதர்புந்திநேயாய் செய்பவர் குரு செவ்வாய்,
இதமார் சுபனாம் சேய்யோகம் இருக்கும்”
( ஜாதக அலங்காரம் )
“கர்கடக லக்கினத்தில் காணச் சனித்தவர்க்கு சொற்புதனும் சுக்கிரனும்
சொல்பாவி-நற்குருவும் செல்சேய் நல்லவர்கள் செய் குருவும் கூடியிடில்
நல்யோகந் தந்திடுவர் நாடு.”
மேற்படி கவிகள் பார்க்கும்போது,
கடக லக்கினத்தில பிறந்தவர்களுக்கு குரு-செவ்வாய் சேர்க்கை
( அ ) பார்வை-கேந்திர திரி கோணங்களில் இருப்பின்
யோகத்தை செய்ய தகுதி உடையவர்களே.